Friday, April 28, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 14

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உள்ளாக நால்வகைக் கோட்டை - நான்கு வகை தீய
பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை - அப் பகை குணங்களை ஓட விரட்டினால் நாடென்னும் இவ்வுடலை ஆளலாம்
கள்ளப் புலனென்னுங் காட்டை - தீய சொல்லென்னும் பொய்யை
வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. - வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.
நான்கு வகை தீய பகை குணங்களை ஓட விரட்டினால், நாடென்னும் இவ்வுடலை ஆளலாம். தீய சொல்லென்னும் பொய்யை, வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.

2 comments:

ENNAR said...

நன்றா உள்து சிவா

சிவமுருகன் said...

நன்றி என்னார் சார்