Thursday, April 06, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நந்த வனத்திலோ ராண்டி - அழகிய நந்தவனமான இவ்வுலகில் ஒரு ஆண்டி(மனிதன்)
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் - குயவனான இறைவனிடம் நாலும் ஆறும் - ஆக பத்து மாதமாக வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - ஒரு தோண்டியான குழந்தையை பெற்றான்.
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. - அதை சீராக பயன்படுத்தாமல்(கூத்தாடி), நல்வழியில் செலுத்தாமல் (கூத்தாடி), பாபங்களை செய்து கிடைத்தற்கரிய மாணிட பிறவியை வீணாக்கினான் (போட்டுடைத்தாண்டி).

2 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு சிவமுருகன்,

//ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்//

"ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்" என் இருத்தல் வேண்டும்.

சிவமுருகன் said...

அன்புள்ள ஐயா,
திருத்தி விட்டேன்,
வருகைக்கும் சுட்டி காட்டியதற்க்கும் நன்றி.

நானும் ஏதோ உதைக்கிறதே என்று நினைத்தேன். புத்தகத்தில் இருந்ததை அப்படியே தட்டி விட்டேன்.