Tuesday, April 18, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 7

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்லவர் தம்மைத் தள்ளாதே - உதவும் நல்லவர்களின் சொற்களை தட்டலாகாது,
அறம்நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே - 32 அறங்களில் ஒன்றையும் விடாமல் பாதுகாக்க வேண்டும்
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - புரங்கூறுவதையும், பொல்லாங்கும் சொல்வதையும் செய்யகூடாது
கெட்டபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. - தரம் தாழ்ந்த சொற்களையும் பொய்யையும், கோள்-செல்வதையும் தவிர்க வேண்டும்.

2 comments:

NambikkaiRAMA said...

இந்த மாதிரியான பதிவுகளை தாங்கள் நம்பிக்கை குழுமத்தில் எழுத வேண்டும் என்று ஆவலோடு கேட்டுக் கொள்கிறேன். சுட்டி

சிவமுருகன் said...

இராமரே,
இன்றே இணைந்து விட்டேன்.

இனி தொடர்கிறேன்.

வருகைக்கும் பின்னூட்டதிற்க்கும் மிக்க நன்றி.