Friday, April 28, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 15

காசிக்கோ டில்வினை போமோ - அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இப்பாடலில் கொஞ்சம் நிறையவே கேள்விகளை எழுப்புகிறார்.
காசிக்கோ டில்வினை போமோ - காசிக்கு போனால் வினை (பாவம்) போகுமா?
அந்தக் கங்கையாடில் கதிதானும் உண் டாமோ? - அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - (இப்படியாக நடந்து விட்டால்) பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா?
பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ. - மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?
காசிக்கு போனால் வினை போகுமா? அந்த கங்கையிநீறாடினால் நற்கதி கிடைக்குமா? இப்படியாக நடந்து விட்டால், பேசும் பேச்சுகளும், செய்யும் செயல்களும் நன்மை, தீமைகளை உண்டாகாதா? மேலும் பல பிரிவுகள் பிறப்பதும் போற்றுதலோ, அன்றி தூற்றுதலோ?

கடுவெளிச் சித்தர் பாடல் # 14

உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. 14

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உள்ளாக நால்வகைக் கோட்டை - நான்கு வகை தீய
பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை - அப் பகை குணங்களை ஓட விரட்டினால் நாடென்னும் இவ்வுடலை ஆளலாம்
கள்ளப் புலனென்னுங் காட்டை - தீய சொல்லென்னும் பொய்யை
வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை. - வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.
நான்கு வகை தீய பகை குணங்களை ஓட விரட்டினால், நாடென்னும் இவ்வுடலை ஆளலாம். தீய சொல்லென்னும் பொய்யை, வெட்டி எரித்தாலோ, எரிந்தாலோ தாம் நம் மெய்வீடான சிவபதத்தை காணலாம், அடையலாம்.

Monday, April 24, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 13

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - சவத்தை எடுத்துசெல்லும் நால்வரோடு ஐவர் சூழ்ந்திடும் காடு அந்த சுடுகாடு, இடுகாடு.
இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு - அந்த ஐவரும் அடைந்திடும் நாடு.
முந்தி வருந்திநீ தேடு - முக்தி பெற வருந்தி, போற்றி தேடு.
அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு - அந்த மூலத்தை அறிந்திட்டவர்களின் பாதையில் வருவாய், அவர்களின் வீட்டிற்க்கு செல்வாய்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 12

கூடவருவ தொன்றில்லை - புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

கூடவருவ தொன்றில்லை - கூடவரப்போவது ஒன்றுமில்லை
புழுக்கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை - உன்கூட்டை கூட புழுக்கள் தின்னும்,
தேடரு மோட்சம தெல்லை - மோட்சத்தின் எல்லையை தேடு.
அதைத்தேடும் வழியைத் தெளிவோரு மில்லை - அதை தேடி சென்றவர் வழியை பற்றி தெளிவோருமில்லை.

கடுவெளிச் சித்தர் பாடல் # 11

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


மெய்குரு சொற்கடவாதே - உன்மை குருவின் சொல்லை தாட்டாதே
நன்மை மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே - நன்மைகளை மென்மேலும் செய்வாய். வரையறுக்காதே.
பொய்க்கலையால் நடவாதே - பொய்கலைகளை நாடாதே, நடத்தாதே.
நல்ல புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே - நல்ல கொள்கைகளை புத்தியில் ஏற்றுக.

Saturday, April 22, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 10

மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

மெஞ்ஞானப் பாதையி லேறு - மெஞ்ஞானப்பாதையான சிவப்பாதையில் சென்று

சுத்த வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு - பேரானந்த வேதாந்த வெட்ட வெளியில் சேர்ந்து

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - அஞ்ஞான மார்கத்தை அகற்றி

உன்னை அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு - உன்னை அன்டினோர்க்கும் அவ்வானந்த வழியை போதிப்பாய்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 9

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பிச்சையென்றொன்றுங்கேளாதே - பிச்சை எடுத்து வாழக்கூடாது, (ஏற்பது இகழ்ச்சி).

எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே - பெண்ணாசை கொள்ளாதே

இச்சைய துன்னையாளாதே - ஆசை துன்பத்திற்க்கு காரணம், ஆசை வைக்காதே.

சிவன் இச்சை கொண்டதவ் வழியேறி மீளாதே - சிவன் மேல மனம் செலுத்தி, அந்த வழியிலிருந்து அகலாமல் சிவலோகம் அடைவாய், அப்பாதையிலிருந்து மீளாதே அகலாதே.

Wednesday, April 19, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 8

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
எவ்வாறு வாழவேண்டும் என்று செல்கிறார் சித்தர் பிறான்
வேத விதிப்படி நில்லு - வேதங்கள் சொல்லியபடி மனிதர்களாக வாழவேண்டும்
நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு - நால்லோரின் உயரிய வழிதன்னை நாடி செல்ல வேண்டும்
சாத நிலைமையே சொல்லு - சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும், அதை பிறர்க்கு, போதிக்க வேண்டும்
பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. - பொல்லாத சொத்தான, மனிதனை மிருகமாக்கும், சண்டாளமாக்கும் கோபாத்தை கொல்ல வேண்டும்.

Tuesday, April 18, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 7

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்லவர் தம்மைத் தள்ளாதே - உதவும் நல்லவர்களின் சொற்களை தட்டலாகாது,
அறம்நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே - 32 அறங்களில் ஒன்றையும் விடாமல் பாதுகாக்க வேண்டும்
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - புரங்கூறுவதையும், பொல்லாங்கும் சொல்வதையும் செய்யகூடாது
கெட்டபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. - தரம் தாழ்ந்த சொற்களையும் பொய்யையும், கோள்-செல்வதையும் தவிர்க வேண்டும்.

Tuesday, April 11, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 6

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்ல வழிதனை நாடு - நல்ல வழிகளான சாதுகளின் நட்ப்பை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு - நாளொரு வண்ணம் பரமனான அந்த ஈசனை தேடு.
வல்லவர் கூட்டத்திற் கூடு - வல்லவர் கூட்டமான சித்தர்கள், யோகபுருஷர்களுடன் கூடு,
அந்த வள்ளலை - அந்த ஈசனை
நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு. - எப்போதும் நெஞ்சினில் ஓர் ஆலயம் செய்து அவ் ஆண்டவனை வாழ்த்தி கொண்டாடு.

Monday, April 10, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 5

தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
தூடண மாகச்சொல் லாதே -
தேடுஞ்சொத்துகளில்
ஒரு தூசும் நில்லாதே
ஏடணை மூன்றும் பொல்லாதே -
சிவத்திச்சைவைத்தால்
எம லோகம் பொல்லாதே

Thursday, April 06, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 4

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நந்த வனத்திலோ ராண்டி - அழகிய நந்தவனமான இவ்வுலகில் ஒரு ஆண்டி(மனிதன்)
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் - குயவனான இறைவனிடம் நாலும் ஆறும் - ஆக பத்து மாதமாக வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - ஒரு தோண்டியான குழந்தையை பெற்றான்.
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. - அதை சீராக பயன்படுத்தாமல்(கூத்தாடி), நல்வழியில் செலுத்தாமல் (கூத்தாடி), பாபங்களை செய்து கிடைத்தற்கரிய மாணிட பிறவியை வீணாக்கினான் (போட்டுடைத்தாண்டி).

Sunday, April 02, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 3

நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
மாயை இப்பாடலில் விளக்குகிறார்
நீர்மேற் குமிழியிக் காயம் - வினாடி நேரத்தில் உருவாகி, க்ஷன நேரத்தில் மறையும் நீர்குமிழி போன்ற வாழ்க்கை.
இது நில்லாது போய்விடும் நீயறிமாயம் - இது அநித்தியமானது, நிலையில்லாத நீயறியாத மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - உலகில் உயர்ந்தது அன்பு
சற்றும் பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். - உன்னை மாற்றாமல் இருக்க பண்ணும் உபாயம்