Monday, April 24, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 13

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு - சவத்தை எடுத்துசெல்லும் நால்வரோடு ஐவர் சூழ்ந்திடும் காடு அந்த சுடுகாடு, இடுகாடு.
இந்த ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு - அந்த ஐவரும் அடைந்திடும் நாடு.
முந்தி வருந்திநீ தேடு - முக்தி பெற வருந்தி, போற்றி தேடு.
அந்த மூலம் அறிந்திட வாமுத்தி வீடு - அந்த மூலத்தை அறிந்திட்டவர்களின் பாதையில் வருவாய், அவர்களின் வீட்டிற்க்கு செல்வாய்.

1 comment:

Prasanna Raghavan said...

ஐந்துபேர் சூழ்ந்திடும் காடு - என்றால் ஐம் புலன்க‌ளால் சூழ்ந்த‌ இந்த‌ உடல் என்றல்ல‌வா அர்த்த‌ம்?