Monday, April 24, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 11

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


மெய்குரு சொற்கடவாதே - உன்மை குருவின் சொல்லை தாட்டாதே
நன்மை மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே - நன்மைகளை மென்மேலும் செய்வாய். வரையறுக்காதே.
பொய்க்கலையால் நடவாதே - பொய்கலைகளை நாடாதே, நடத்தாதே.
நல்ல புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே - நல்ல கொள்கைகளை புத்தியில் ஏற்றுக.

4 comments:

ENNAR said...

நன்றாக உள்ளது

rnatesan said...

அவ்வளவும் அற்புதம்!!! நன்றி சிவ முருகன்!!

சிவமுருகன் said...

நன்றி என்னார் சார்.

சிவமுருகன் said...

நடேசன் சார்,

எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். தவறு இருப்பின் சுட்டி காட்டவும்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.