Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 34

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொன்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர்வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.


இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்.

கடுவெளி சித்தர் பாடல் # 33

கள்ள வேடம் புனையாதே - பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

(எத்தகைய போதனைக்களுக்காகவோ பிறவற்றிக்காகவோ) கள்ள வேடம் புனையக்கூடாது, திருட்டு தனமாக, மாய உருவை தரிக்க (ஏற்க) கூடாது, அப்படிபட்ட வினைகடனானது எத்தனை கங்கையாடினாலும் அது கரையாது. திருட கூடாது, திருட்டை நினைக்கவும் கூடாது. நட்புள்ளவரிடமோ, இல்லாதவரிடமோ, அல்லது கள்ளநட்ப்பை கொண்டோ கோள் மூட்ட கூடாது.

கடுவெளி சித்தர் பாடல் # 32

எவ்வகை யாகநன் னீதி - அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


நல்ல நீதிகள் எந்த வகையாக இருந்தாலும், அதை அறிந்து பின் அதை பிறர்க்கு சொல்ல வேண்டும், அத்தகைய நீதி எல்லாம் ஒவ்வொரு பிறிவு பல சாதிகளுக்கு சொல்லப்பட்டுள்ளது, அதை அனைத்தையும் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு பிறர்க்கு போதிப்பாய்.

கடுவெளி சித்தர் பாடல் # 31

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.


1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

(நன்றி: தினமலர் - ஆன்மீக மலர்)


ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிற்க்க வேண்டும்.

கடுவெளி சித்தர் பாடல் # 31

செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.


1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

(நன்றி: தினமலர் - ஆன்மீக மலர்)


ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிற்க்க வேண்டும்.

கடுவெளி சித்தர் பாடல் # 30

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

திருவிடத்திற்க்கு ஒரே வழி ஒரு ஏணி தான் அதன் பெயர் பக்தி. அதை உன் மனதில் நாட்டு, உன் மனமானது சொந்தம் பந்தம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, அதை உயர்த்தி, விசால படுத்தி (நீட்டி), உண்மையை உணர்ந்து, சாற்றி, பெற வேண்டும். பின் மற்ற சிந்தனைகளை, சேதிகளை, சமயங்களை தன்வசமாக்கி கொள்ளவேண்டும்.

கடுவெளி சித்தர் பாடல் # 29

கஞ்சாப் புகைபிடி யாதே - வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29


பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

போதை வஸ்துக்களான கஞ்சா, புகை, பிடிக்க கூடாது, போகத்தை காட்டி உன் குடியை கெடுக்கும் காமவெறி கொள்ள கூடாது, உயிர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் அதை கொன்று அதற்க்கு துன்பம் விளைவிக்க கூடாது, பக்தி இல்லாத புத்தி பேதலிக்கும் நூல்களை படிக்க கூடாது.

கடுவெளி சித்தர் பாடல் # 28

போற்றுஞ் சடங்கை நண்ணாதே - உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே. 28

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


சிலர் போற்றும் சடங்கு சம்பிருதாயங்களை நையாண்டி செய்ய கூடாது, அதாவது பிற மத, சாதி, சமயங்களின் சடங்குகளை எள்ளி நகைக்கூடாது, தற்புகழ்ச்சி செய்து மற்றவர்கள் உன்னை மதிக்க வேண்டும் என்று எண்ண கூடாது. அப்படி பட்ட வாழ்க்கை கொள்ள கூடாது, பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் தீசெயல்களை செய்யக்கூடாது.

கடுவெளி சித்தர் பாடல் # 27

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


சிவன் கழுத்தில் அனிகலனாக இருக்க கூடிய அந்த நாகராஜனை அடைத்து வைக்ககூடாது அதை ஆட்டுவிக்க கூடாது. உன்னுடைய சீமாட்டி பத்தினிகளை, பழிக்க கூடாது. கசப்பான செயல்களையும் சொல்களையும் உலகில் தினிக்க கூடாது. இதையே வேறு முகமாக பார்த்தால் ஸம்ஸார பந்தத்தை உலகில் தினிக்க கூடாது என்கிறாரோ என்றும் தோன்ற கூடும், உன்னுடைய வீன் வீறாப்புகளை உன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்களிடம் காட்டக்கூடாது.

கடுவெளிச் சித்தர் பாடல் # 26

சிவமன்றி வேறே வேண்டாதே - யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


இந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது.