Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 27

பாம்பினைப் பற்றியாட் டாதே - உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


சிவன் கழுத்தில் அனிகலனாக இருக்க கூடிய அந்த நாகராஜனை அடைத்து வைக்ககூடாது அதை ஆட்டுவிக்க கூடாது. உன்னுடைய சீமாட்டி பத்தினிகளை, பழிக்க கூடாது. கசப்பான செயல்களையும் சொல்களையும் உலகில் தினிக்க கூடாது. இதையே வேறு முகமாக பார்த்தால் ஸம்ஸார பந்தத்தை உலகில் தினிக்க கூடாது என்கிறாரோ என்றும் தோன்ற கூடும், உன்னுடைய வீன் வீறாப்புகளை உன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் மற்றவர்களிடம் காட்டக்கூடாது.

2 comments:

G.Ragavan said...

சிவமுருகன், கடுவெளிச் சித்தர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் படித்ததில்லை. உங்க புண்ணியத்துல இப்ப படிக்கக் கிடைச்சது.

பாம்பினைப் பற்றியாட்டாதே-க்குப் பொருள் சரிதானா? எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது. பாம்பானது சீறிச் சீறி அடுத்தவரைக் கடிக்கிறது. அந்தப் பாம்பினைப் பற்றி உனது நாவினை இயக்கித் தவறாதே. இப்படித் தோன்றுகிறது எனக்கு.

சிவமுருகன் said...

//பாம்பினைப் பற்றியாட்டாதே-க்குப் பொருள் சரிதானா? எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது. பாம்பானது சீறிச் சீறி அடுத்தவரைக் கடிக்கிறது. அந்தப் பாம்பினைப் பற்றி உனது நாவினை இயக்கித் தவறாதே. இப்படித் தோன்றுகிறது எனக்கு.//

சித்தர்கள் எப்போதும் ஒன்றை சொல்லியும் மற்றொன்றை மறைத்து சொல்லுவது இயற்க்கை அதன் பொருள்கள் இடத்திற்க்கேற்ப்ப மாறும். நீங்கள் சொல்வதும் சரியாக பொருந்துகிறது.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி. (எல்லா பாடலையும் பதித்து விட்டேன் பார்த்தீற்களா?)