Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 30

பத்தி யெனுமேணி நாட்டித் - தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

திருவிடத்திற்க்கு ஒரே வழி ஒரு ஏணி தான் அதன் பெயர் பக்தி. அதை உன் மனதில் நாட்டு, உன் மனமானது சொந்தம் பந்தம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, அதை உயர்த்தி, விசால படுத்தி (நீட்டி), உண்மையை உணர்ந்து, சாற்றி, பெற வேண்டும். பின் மற்ற சிந்தனைகளை, சேதிகளை, சமயங்களை தன்வசமாக்கி கொள்ளவேண்டும்.

No comments: