Monday, July 03, 2006

கடுவெளி சித்தர் பாடல் # 34

எங்கும் சுயபிர காசன் - அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அதிலும் சுயம்பு பிழம்பாய், சுய பிரகாசமாய் இருக்கும் தேவாதி தேவன் சிவசங்கரன், அவன் ஒடுங்குவது தொன்டருள்ளத்தில் தான், அதுவே அவன் வாசம் செய்யும் மெய் தலம், (அதிலிருக்கும்) தன்னை துதிப்பவர்க்கு, வணங்குபவர்க்கு, (அவர்வேண்டும்) பதவியை அளித்தருளுவான்.


இதை அறிந்து பாபஞ்செய்யாதிரு மனமே, இல்லையெனில் நாளை கோபங்கொண்டு தெய்வத்திடம் உரய வேண்டிய உன் ஆன்மாவை எமன் கொண்டோடிப் போவான்.

3 comments:

G.Ragavan said...

எனக்கு ஔவையின் பாடலொன்று நினைவிற்கு வருகிறது சிவமுருகன்.

இறைவனோ தொண்டருள்ளத்து அடக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே!!!!!!!!!

சிவமுருகன் said...

இராகவன்,

அதே பாடல் அடிப்படையில் தான் நானும் இதன் பொருளை தந்திதிருந்தேன்.

நன்றி.

Sivamjothi said...

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

(First 2 mins audio may not be clear... sorry for that)

(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




Online Books
http://www.vallalyaar.com/?p=409