Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 21

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


ஆன்மாவால் தான் வாழ்க்கை என்னும் ஆட்டம், தேகமெனும் உடல் இல்லாத போது காணும் ஆட்டம், வானிற்க்கு கீழே (உலகத்திலே) என்றும் நாட்டம், தினம் செய்யும் ஏச்சு பேச்சுகளில் வருமே சிற்றின்பக்கொண்டாட்டம்.

6 comments:

Maayaa said...

nalla paadal !!

சிவமுருகன் said...

நன்றி ப்ரியா.

om tat sat said...

சிவமுருகன் அவர்களே,

சித்தர் பாடல்கள் உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று சொல்லும் தன்மை கொண்டுள்ளவையால் தாங்கள் அந்த
உட்கருத்தை தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

ஓம்

சிவமுருகன் said...

அன்புள்ள ஓம் தத் சத்,
//om tat sat said...
சிவமுருகன் அவர்களே,

சித்தர் பாடல்கள் உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று சொல்லும் தன்மை கொண்டுள்ளவையால் தாங்கள் அந்த
உட்கருத்தை தெரியபடுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.

ஓம் //

என்னால் முடிந்தவரை நிச்சயம் செய்கிறேன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

trendy said...

வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்

means meditating on the top - mid eyebrow/crown centre etc which will give you bliss

trendy said...

வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்

means meditating on mid eye centre, crown centre etc.