Friday, May 26, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 21

ஆன்மாவால் ஆடிடு மாட்டம் - தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


ஆன்மாவால் தான் வாழ்க்கை என்னும் ஆட்டம், தேகமெனும் உடல் இல்லாத போது காணும் ஆட்டம், வானிற்க்கு கீழே (உலகத்திலே) என்றும் நாட்டம், தினம் செய்யும் ஏச்சு பேச்சுகளில் வருமே சிற்றின்பக்கொண்டாட்டம்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 20

ஆற்றும் வீடேற்றங் கண்டு - அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு. 20

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


அடியார் செய்யும் தொண்டைபோல், கண்டு, கேட்டு, குறிப்பறிந்து செய்து, மேலும் ஆதி சிவனுக்கு வழிமுறைபடி தொண்டு செய்து வர, குற்றம், சீற்றம், சினம் தவிர்த்து, செய்து வர பிறவிபிணி அறுத்து பெருவீட்டை அடைய செய்வான்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 19

அன்பெனும் நன்மலர் தூவிப் - பர
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
அன்பு என்ற நன்மலரால் அவனை தூவி தொழுது, வாயினால் பாடி, அவனடி சென்று, பேரின்பத்தில் திளைத்து தொழுதால், அவனே ஓடோடி வந்து உன்னை ஈடு இனையற்ற கைலாச பதவியை தந்தருள்வான்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 18

பாரி லுயர்ந்தது பக்தி - அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி. 18

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உலகில் உயர்ந்தது பக்தி (பத்தி), அதை பற்றி விட்டால் பற்றியவற்க்கு உண்டு முக்தி, சீரில், சமச்சீரில், சராசரியில் உயர்ந்தது சித்தி, சிவன் மேல் பத்தி கொண்டவர்கள் யாராயினும் அவர் செயல் சித்திக்கும்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 17

சந்தேக மில்லாத தங்கம் - அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சந்தேகமில்லாமல் சிறப்பானது தங்கம் நல்லவையே, அதை சார்ந்து கொண்டாலுமே தாழ்வு இல்லாதது, ஆதி அந்தமில்லாத உயறிய அன்பு இருந்தால்ம் எங்கும் ஆனந்தமே பொங்கும்.

Wednesday, May 17, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 16

பொய்யாகப் பாராட்டுங் கோலம் - எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

முகஸ்துதி செய்யும் பொய் பாராட்டுக்கள், எல்லாம் போய்விடும் வாய்க்காது, (நிலைக்காது,), உண்மை மட்டுமே நிலைத்து நிற்க்கும் தன்மையுடையது. உலகில் மேவ மேலாக கருதப்படும் இது போன்ற செயல்களை புரிந்திடுவதால் என்ன அனுகூலம்?