Tuesday, June 27, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 24

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


பொய் வேதங்களை பார்க்க கூடாது, அதை பொதிப்பவரை நாடாதே. அந்த போதகர் சொல் போகும்போது உடன் வராது. விழியால் மாய்க்கும் மங்கைகளை சாராதே, துன்பம் தரும் துர்மார்க கூட்டத்தில் சேராதே, அதில் மகிழாதே.

2 comments:

Unknown said...

எனக்கு சித்தர் பாடல்களில் ஆர்வம் அதிகம். ஆனால் எனக்கு அவை எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தேன்.... மேலும் எனக்கு சித்தர் பாடல்களின் தொகுப்பை வழங்கினால், நான் மிகஉம் சந்தோஷ படுவேன்.

சிவமுருகன் said...

மணி!

நீங்க இந்த தளத்துக்கு போனீங்கன்னா பல பாடல்கள் பார்க்கலாம்!
http://www.tamilnation.org/literature/projectmadurai/indexpmsubject.htm

http://www.tamilnation.org/literature/pmunicode/mp076.htm