குமரன் அவர்களின் சிவராத்திரி அன்று சிவதரிசனம் பெற்று சங்கரனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைத்த பொழுது, அவரது புக்ழ் பாடும் அடியவர்களை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அப்போது வந்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இப்பிளாக்கை ஆரம்பித்துள்ளேன்.
மஹாதேவன் சிவனுக்கு அடியவர் கூட்டம் ஆயிரம் இருந்தாலும்.
அவ்வடியவர்களில்,

நாயன்மார்கள் அறுபத்து மூவரும் நாயகனின் உரிமை பிள்ளைகள்.
பதினென் சித்தர்களும் சிவசங்கரனின் செல்லப்பிள்ளைகள்.
இந்த செல்ல பிள்ளைகளின் வார்த்தை விளையாட்டும், செயல் விளையாடல்களும், பாடல்களும், படித்து வரும் பொழுது அவர்களின் வாழ்க்கை முறை, சிந்தனை, அவர்களது குருக்கள் என்று சிந்திக்க பட்டியல் நீள்கிறது. ஒருசில சித்தர்களின் பாடல்களை பதித்து, அதற்கான பொருள்களை பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.
சித்தர்கள் என்றதும் அவர்களின் ரசவாதம் செய்வதில் வல்லவர் என்ற பரவலான கருத்துள்ளது அதை மெய்ப்பிக்கும் பல பாடல்களையும் பாடியுள்ளனர் சித்தர்கள். அத்துடன் சில பாடல்களை படிக்கும் போது பொருள்கள் புரியாதவண்ணம் வார்த்தைகளைக் கையாண்டுள்ளனர். இதன் மூலம் தங்களது ரகசியங்களை குருபரம்பரையாக காக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
3 comments:
ரொம்ப சந்தோசம் சிவமுருகன். சித்தர் பாடல்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
அன்பரே தங்கலுடைய ஆன்மீக பணி மேன்மேலும் எந்த இடையூரும் இல்லாமல் தொடற அனைத்து சித்தர்களையும் பிராத்திக்கிறேன். - த. முருகானந்த். d.muruganand@gmail.com
Post a Comment