Tuesday, June 27, 2006

கடுவெளிச் சித்தர் பாடல் # 25

வைதோரைக் கூடவை யாதே: - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

உனக்கு தீங்கு செய்தவரை கூட தீங்கு எண்ணாதே. இந்த வையகம் முழூவதும் பொய்யால் நிரம்பினாலும் உன்னுள் ஒரு பொய்அனுவையும் நுழையவிடாதே. பொல்லாத வினைகளை செய்யாதே, பறக்கும் பறவைகள் மேல் கல் எறிந்து அதை காயப்படுத்தாதே.

கடுவெளிச் சித்தர் பாடல் # 24

பொய்வேதந் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே. 24

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.


பொய் வேதங்களை பார்க்க கூடாது, அதை பொதிப்பவரை நாடாதே. அந்த போதகர் சொல் போகும்போது உடன் வராது. விழியால் மாய்க்கும் மங்கைகளை சாராதே, துன்பம் தரும் துர்மார்க கூட்டத்தில் சேராதே, அதில் மகிழாதே.

கடுவெளிச் சித்தர் பாடல் # 23

இந்த வுலகமு முள்ளு - சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு. 23

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

இந்த உலகமே பாசம், பந்தம் மற்றும் பல இன்னல்கள் கொண்ட ஒரு முள். சற்றும் இச்சை வைக்காமல் ஒவ்வொரு நாட்களையும் வாழ்வாய். சத்திய வெள்ளமான அந்த பரம்பொருள்ளை மொள்ளு (ஏந்திக்கொள்). உன் சிந்தனை என்றும் திகட்டாமற்கொள்.

கடுவெளிச் சித்தர் பாடல் # 22

எட்டுமி ரண்டையும் ஓர்ந்து - மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து. 22

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

எட்டும் இரண்டும் - பத்து அதாவது பத்து திசைகளையும் தன் வசமாக்கி, எல்லா மறைகளும் (வேதங்களும்) பரிபூரணமாய் கற்று தேர்ந்து. இவுடலை விட்டு அண்ட வேளிதனை சார்ந்துவிட்டால், இப்பிறவி வெள்ளத்திலிருந்து மூழ்கி முத்தெடுத்துவிடலாம் எனவே, மனமே பாபம் செய்யாதிரு இல்லையேல் நாளை எமன் கொண்டோடிவிடுவான்.